முருகப்பெருமான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட வைரவேலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவிலுக்கு பாலகுமார், சபரி பாபு ஆகியோர் சென்றுள்ளனர். இவர்கள் வெள்ளியில் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசி நெற்றியில் வைரக்கல் பதித்த வேலை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் கோவிலில் வைத்து வேலுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து முருகப்பெருமானுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றுள்ளது. அதன்பின் முருகப் பெருமானை தரிசிக்க வந்த ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.