Categories
உலக செய்திகள்

வைரல் புகைப்படம் : “தடுப்பூசியின் முக்கியத்துவம்!”…. 6 மணி நேரம்…. தந்தையை தோளில் சுமந்த இளைஞர்….!!!!

சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில் சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டதோடு, முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

எனவே உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் பகுதியில் வசித்து வரும் ஒரு இளைஞர் தனது தந்தைக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை கிட்டத்தட்ட 6 மணி நேரம் தோளில் தூக்கி சென்று அந்த தடுப்பூசி மையத்தை அடைந்துள்ளார். இந்த நிகழ்வு குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.

Categories

Tech |