Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வைரமுத்துவின் “ரோஜாவே தமிழ் பேசு பாடல்”… குவிந்த பாராட்டுகள்… வைரமுத்து ட்விட்…!!!!

வைரமுத்துவின் ரோஜாவே தமிழ் பேசு பாடல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு பாராட்டு தெரிவித்து அவர்களுக்கு நன்றி கூறி ட்விட்டர் பதிவு போட்டுள்ளார்.

வைரமுத்துவின் வரிகளில் உருவாகி உள்ள நாட்படு தேறல் பாடல் தொகுப்பானது ஆல்பங்களாக மாறி வருகின்றது. இந்த பாடல் தொகுப்பிற்கான பணிகளை தற்போது வைரமுத்து செய்து வருகின்றார். இந்த இரண்டாம் பகுதியில் இருந்து “ரோஜாவே தமிழ் பேசு” என்ற பாடல் உருவாகி இரண்டு நாட்களுக்கு முன்பாக வெளியாகி இருந்தது.

இதில் பிக்பாஸ் பிரபலம் அக்ஷரா ரெட்டி நடித்திருக்கின்றார். இந்தப் பாடலுக்கு பலரும் பாராட்டி கருத்துகளை தெரிவித்து வந்தார்கள். இந்த நிலையில் ரோஜாவே தமிழ் பேசு பாடலை கேட்டு பாராட்டியவர்களுக்கு நன்றி தெரிவித்து வைரமுத்து ட்விட்டர் பதிவை போட்டுள்ளார். அதில்…
என் தமிழைப் பின்தொடர்ந்து பின், எத்துணையோ அன்பர்கள் என்னோடு பேசினீர்கள். தொலைபேசி தொண்டைகட்டிப் போனது. என் மனமோ பனிக்கட்டியானது. பின்னூட்டங்களை வாசித்து ரசித்தேன். என் தமிழைப் பின்தொடர்ந்து”… என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |