செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வைகோ அவர்கள் மீது பெரும் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கக்கூடிய ஒரு மனிதன் நான். பலமுறை அவரை நேரில் பார்க்கும்போது நான் வெளிப்படுத்தி இருக்கிறேன். அவருடைய பேச்சை அதிகமாக பார்ப்பேன் என்று கூறியிருக்கிறேன்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையைப் பொருத்தவரை வைகோ அவர்கள் இப்போது எதுவும் பேசாமல் இருப்பது ஒரு சரியான முறை கிடையாது. ஏனெனில், அந்த 5 மாவட்டங்களில் விவசாய நண்பர்களுக்கு ஒரு மிகப் பெரிய சதி நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நம்முடைய முதலமைச்சர் அவர்களும் கேரளாவின் முதலமைச்சர் திரு. விஜயன் அவர்களும் செய்கின்ற இந்தத் திட்டத்தை பார்க்கும்போது இதற்கு நம்மளுடைய தலைவர் திரு. வைகோ அவர்கள் பேச வேண்டும்.
முல்லைப் பெரியாறு பற்றி பேசிய மேடையில் நான் கூறினேன் தேனியில்… அதற்கு வைகோ அவர்கள் கூறியிருந்த அறிக்கை, ஏற்புடையதல்ல. இதை பற்றி நீங்கள் யாரும் பேசக்கூடாது. வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். காவல்துறையினருக்கு என்ன தெரியும் இவ்வாறு பேசி இருக்கிறார். இதற்க்கு மாநிலத்தில் உடைய செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அவர்கள், அருமை சகோதரர் சூர்யா அவர்கள், நானும் கூட அறிக்கையின் மூலமாக அதற்கு பதில் கூறி இருந்தேன்.
அதனால் நாங்கள் வைகோ அண்ணனிடம் எதிர்பார்ப்பது ஒரே ஒரு விஷயம்தான். அவர்கள் இதைப் பற்றி பேச வேண்டும். விவசாயிகளின் கூட நிற்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு சும்மா சப்பைக்கட்டு கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த அனைத்து பேரையும் கூட இதன் மூலமாக இழந்து விடுவார்கள். எந்தக் கட்சி எந்த கூட்டணியில் இருந்தாலும் கூட உண்மையைப் பேச வேண்டும். விவசாயிகளுக்காக பேச வேண்டும். என்பதுதான் எங்கள் அறிக்கையின் மூலமாக கூறியிருக்கிறோம் என தெரிவித்தார்.