Categories
சினிமா தமிழ் சினிமா

வைகை புயல் வடிவேலு நடிக்கும் “நாய் சேகர் ரிட்டன்ஸ்”… வெளியான முதல் பாடல் வீடியோ…. குஷியில் ரசிகர்கள்….!!!!

டிரைக்டர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் “நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ், சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அத்துடன் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்து உள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இப்போது பின்னணி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் “நாய் சேகர் ரிட்டன்ஸ் ” படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. அதாவது “அப்பத்தா” என்ற இப்பாடலை வடிவேலு பாடி இருக்கிறார். இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |