மாதந்தோறும் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று இவ்வாறு விரதம் இருந்து விஷ்னுவை வழிபடுங்கள், அவரின் அருளையும் ஆசியையும் பெறுங்கள்..!
- காயத்ரி மந்திரத்தை விட சிறந்த மந்திரமில்லை
- தாயை சிறந்த கோவிலும் இல்லை
- ஏகாதசியை விட சிறந்த விரதமும் இல்லை
என்கின்றது புராணம். ஏகாதசி விரதம் மேற் கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அனைத்தும் அகலும். சகல செல்வங்களும் பெருகும். முக்திக்கான வழியை அடைவீர்கள் என்பது உண்மை. ஏகாதசி விரதம் மேற்கொள்வதன் மூலமாக உங்கள் வாழ்வில் அனைத்து பிரச்சினைகளும் நிச்சயம் விலகும். வருடம் முழுதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள்.
மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலன்களை நமக்கு அருளும். மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்து பலனைத் தரக்கூடியது என்பதால் இது முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது மட்டும் உணவு உண்ண வேண்டும்.
ஏகாதசியன்று அதிகாலையில் கண்விழித்து , குளித்துவிட்டு பூஜை செய்து விட்டு விரதத்தை மேற்கொள்ள வேண்டும். ஏகாதசித் திதி முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் இருப்பது நல்லது. குளிர்ந்த நீரை மட்டும் குடிக்கலாம். ஏழு முறை துளசி இலையைச் சாப்பிடலாம். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால் உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும்.
முதியோர்கள் உடல் நலிவுற்றவர்கள் பூஜையில் வைத்த நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை சாப்பிடலாம். அன்றைய தினம் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள்,ஓதுவதன் மூலம் அன்றைய நாளை கழிக்க வேண்டும்.
ஏகாதசி அன்று விஷ்ணு ஆலயங்களில் நடக்கக்கூடிய சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு விஷ்ணுவை பிரார்த்திக்கலாம். வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று வைஷ்ணவ நாட்காட்டியில் காட்டியுள்ளபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீர் கூட அருந்தாமல் விரதம் இருந்தவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய உணவை படைத்து உண்ணலாம்,
ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது போன்று விரதத்தை முடிப்பதும் மிக மிக முக்கியமான ஒன்று. இந்த விரதம் இருந்தால் முழு பலனும் நமக்குக் கிடைக்கும். உணவு சாப்பிடுவதற்கு முன்பு அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும், அன்று தூங்காமல் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் மேற் கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அனைத்தும் அகலும். சகல செல்வங்களும், பெருகும் பகைவர்கள் அனைவரும் நண்பர்களாவார்கள் மேலும் முக்திக்கான வலியையும் நீங்கள் நிச்சயம் அடைவீர்கள்.