இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நமது தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “திருவல்லிக்கேணியில் மிகவும் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் இந்த வருடம் தரிசன டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 200 ரூபாயாக இருந்த டிக்கெட் தற்போது 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது” என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.