தமிழகம் முழுவதும் விவசாயிகள் பயன்பெற கூடிய வகையில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே வேளாண் இயந்திரங்களை முன்பதிவு செய்ய இ-வாடகை ஆன்லைன் செயலியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.