Categories
மாநில செய்திகள்

வேளாண் சட்டங்கள் வாபஸ்…. “உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி”…. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!!

3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது  உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று 9 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது, நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க பாடுபடுகிறோம். விவசாயிகளின் பிரச்னைகளை அருகிலிருந்து பார்த்து உணர்ந்து வருகிறேன். வேளாண் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். 3 புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டு வரப்பட்டது. விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

ஆனால், எங்களால் விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை.. விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்.. 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை விவசாயிகளும் திரும்பப்பெற வேண்டும்.. முறைப்படி  நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களும்  திரும்பப் பெறுவதாக அறிவித்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள் உட்பட பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்ததற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்! மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்!

உழவர் பக்கம் நின்று போராடியதும் – வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும்! அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்..

Categories

Tech |