மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் என்பது கஷ்டங்கள் தான் என பாரிவேந்தர் எம்பி விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைமையில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் வேளாண் தடுப்புச் சட்ட மசோதா குறித்து மக்களவை எம்பியும் இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் கூறுகையில்
குஜராத் வியாபாரிகளை ஆட்சிக்கு கொண்டு வந்தால் அவர்கள் எப்படி விவசாயிகளுக்கு உதவுவார்கள் ? முதுகெலும்பாக இருக்கும் விவசாய தொழிலை அதன் விருப்பத்திற்கு விட்டுவிடவேண்டும். மத்திய அரசு எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அடிப்படையில் மூன்று சட்டங்களை கொண்டு வந்துள்ளது. எதை சொல்லி ஆட்சிக்கு வந்தார்களோ அதை செய்யாமல் சொல்லாததை எல்லாம் செய்கிறார்கள் என பாரிவேந்தர் விமர்சித்துள்ளார்.