வேளாங்கண்ணி அருகே தூக்கில் பிணமாக அழுகிய நிலையில் தொங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி அருகே இருக்கும் கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட காரபிடாகை வடக்கு ஸ்டாலின் நகர் பகுதியில் சேர்ந்த தெய்வராசு என்பவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு ஒரு மகளும் மூன்று மகன்களும் இருக்கின்ற நிலையில் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றார்கள்.
இவர் தனியாக கூரை வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த பொழுது அழுகிய நிலையில் பிணமாக தொங்கியதையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அழுகிய நிலையில் இருந்த அவரின் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.