வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட வழக்கு வருகின்ற பத்தாம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பாஜக சார்பில் நடக்கவிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு தொடர்பான வழக்கு நேற்று நீதிபதி சத்யநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
தொடர்ந்து நடந்த விசாரணையில், வேல் யாத்திரையை தடுக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு வருகின்ற பத்தாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் முழு விவரங்களுடன் காவல் துறைக்கு கூடுதல் விண்ணப்பம் அளிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.