சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டியில் உள்ள பூசாரிபட்டி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் 10 ஆண்டு காலமாக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது நெய்வேலியில் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில் மணி என்பவர் தன்னிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 17 லட்சம் வாங்கி இருப்பதாக தெரிவித்தார். இதனை தொடந்து தலைமறைவாகி முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தனி உதவியாளர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடி செய்த புகாரில் அவரது வீட்டில் வைத்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.