வேலை பார்த்து கொண்டிருந்த போது கல் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மட்டாரப்பள்ளி பகுதியில் கூலி தொழிலாளியான மாதையன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேல்பட்டியில் இருக்கும் கல் குவாரியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாதையன் மீது கல் விழுந்தது. இதனால் படுகாயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதையன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.