தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தென்னை நார் எரிந்து நாசமானது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நகரகளந்தை பிரிவு அருகே தனியார் தென்னை நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு தென்னை நார் முழுவதும் பற்றி எரிந்தது. இதுகுறித்து தொழிலாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தென்னை நார் எரிந்து நாசமானது. இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த சுல்தான்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.