லாரியில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியான வீராச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடோனில் இருந்த நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தொழிலாளி மூட்டையுடன் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக வீராச்சாமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வீராசாமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.