கிராம நிர்வாக அலுவலரை மிரட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் கணேசன்- கனிமொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கனிமொழி பெரும்பத்தூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் சிவஞானபுரம் பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் வேலை பார்க்க விடாமல் கனிமொழியை மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து கனிமொழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.