குஜராத் மாநிலத்தில் நேற்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, குஜராத் மாநிலம் விரைவாக முன்னேறி வருகின்றது. குஜராத் மாநிலத்தில் அண்மைக்காலங்களில் பத்தாயிரம் இளைஞர்களுக்கு பணிநீயமான கடிதங்கள் வழங்கப்பட்டது மட்டுமல்லாமல் அடுத்த ஓராண்டில் 35 ஆயிரம் இடங்களை நிரப்ப இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இங்கு ஏராளமான வேலை வாய்ப்புகளும் சுய வேலை வாய்ப்புகளும் உருவாவதற்கு மாநிலத்தின் புதிய தொழில் துறை கொள்கை தான் மிக முக்கிய காரணம்.
அதாவது அனுபந்தம் என்ற மொபைல் செயலி மற்றும் வேலை வாய்ப்பு இணையத்தளம் ஆகியவற்றின் மூலமாக மாநிலத்தில் வேலை தேடுபவர்கள் மற்றும் பணியமர்த்தும் நிறுவனங்களும் சமூகமாக இணைக்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு முகாம்கள் வரும் மாதங்களில் தேசிய மற்றும் மாநில அளவுகளில் தொடர்ந்து நடத்தப்படும்.10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்த பிரசாரத்தில் இணைவதன் காரணமாக வேலை வாய்ப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயரம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.