ஒன்றிய அரசுத்துறைகளில் 8 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகின்ற 23 ஆம் தேதி கடைசி நாளாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு முடித்தவர்கள் தகுதியானவர்கள்.
விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாக மட்டுமே அனுப்ப முடியும். ஆன்லைன் மூலமாக கட்டணத்தை செலுத்தலாம். ஆன்லைன் மூலம் செலுத்தப்படும் கட்டணம் ஜனவரி 25-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். கணினி வழியாக ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும். பி