வேலை வழங்குவதாக சொல்லி ஜெர் ஏர்வேஸ் பெயரில் போலி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுவதாகவும், அதன் வாயிலாக சிலர் பணம் பறிப்பதாகவும் அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பணியிடங்களுக்குரிய எந்தவொரு அறிவிப்பையும் விடவில்லை எனவும் இதனால் வேலை தேடுபவர்கள் போலி முகவர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது, சில மர்மநபர்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களைப் போன்று ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு போலி நேர்முகத் தேர்வுகளை ஏற்பாடு செய்கின்றனர்.
IMPORTANT NOTICE for all job applicants. pic.twitter.com/N1D9zUUSz7
— Jet Airways (@jetairways) September 20, 2022
அத்துடன் நேர்முகத் தேர்வில் பணி வாய்ப்புக்காக பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர். இதனிடையில் பணியிடங்களை நிரப்புவதற்காக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தேர்வர்களிடம் பணம் பெறுவதில்லை. இந்த நிறுவனத்தில் பணியிடங்கள் பற்றி அறிந்துகொள்ள ஜெட் கேரியர்ஸ் (JetCareers) என்ற இணையப் பக்கத்தை பின் தொடரலாம். எனவே ஜெட் ஏர்வேஸ் பணியிடங்கள் தொடர்பாக சமூகவலைதளத்தில் (அல்லது) மின்னஞ்சல்களில் வரும் அறிவிப்புகளை பரிசீலனை செய்து கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.