யூனிலீவர் பன்னாட்டு நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனம் 1,500 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது.
நுகர் பொருட்களை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம் யூனிலீவர். இந்த நிறுவனம் 1500 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. பிரிட்டனை தலைமையிடமாக் கொண்டுள்ள இந்நிறுவனம் இந்தியாவில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் என்ற பெயரில் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் சர்வதேச அளவியல் 1,49,000 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் மறுசீரமைப்பு என்ற பெயரில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றிவரும் மூத்த ஊழியர்கள் 15% பேரையும், இளநிலை ஊழியர்கள் 5% பேரையும் வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் வலைதளத்தில் தலைமைச் செயல் அதிகாரி ஆலன் ஜாப் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு பாதிக்காத வகையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. மறு ஆலோசனைக்கு உட்பட்டுதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அழகு சாதனம் குறிப்பு, உடல்நலம் சார்ந்த பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஊட்டச்சத்துப் பொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு என நிறுவனத்தின் உற்பத்தி அலகுகள் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் நிறுவனத்தின் ஒரு பகுதியை வாங்குவதற்கு முயற்சி செய்தது ஆனால் அது தோல்வி அடைந்தது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர் . இந்த சூழலில் தான் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் எவ்வளவு பேருக்கு வேலை போகும் என்பது தெரியவில்லை.