Categories
தேசிய செய்திகள்

வேலை கிடைக்கல… சாப்பாட்டுக்கு வழியில்லை… வாலிபர் செய்த காரியம்… விசாரணையில் அதிர்ச்சி தகவல்…!!!

கேரளாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தில் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் வாலிபர் ஜெயிலுக்கு போன பரிதாப நிலைமை ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம், அய்லம் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயது வாலிபர் பிஜு.இவர் கடந்த சில நாட்களாக பல இடங்களில் தேடியும் வேலை கிடைக்காமல் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் விரக்தியின் உச்சத்திற்கு தள்ளப்பட்ட வாலிபர் ஒரு போலீஸ் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த ஜீப் மீது கல்வீசி உள்ளார். இதனால் போலீசார் அவரை கைது செய்து மூன்று மாதம் சிறையில் அடைத்துள்ளனர். இந்த மூன்று மாதங்களும் சாப்பாட்டுக்கு எந்த கவலையும் இன்றி நிம்மதியாக சிறையில் இருந்துள்ளார் பிஜு.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிஜு. பல இடங்களில் வேலை தேடி அலைந்தும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் சாப்பாட்டுக்கு வழியின்றி சிரமப்பட்டு வந்துள்ளார். மீண்டும் சிறைக்கு சென்றால் தான் உணவு கிடைக்கும் என்று எண்ணி மீண்டும் நின்றுகொண்டிருந்த ஒரு போலீஸ் ஜீப் மீது கல்வீசி தாக்கியுள்ளார். அவரை போலீசார் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அதில் அவர் கூறிய தகவல் போலீசாரை திடுக்கிட வைத்துள்ளது. “பல இடங்களில் வேலை தேடியும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் சிரமப்பட்டு வந்தேன். சிறைக்கு சென்றால் சாப்பாடு கிடைக்கும் என்று நினைத்து இவ்வாறு செய்தேன்” என கூறியுள்ளார்.

Categories

Tech |