வேலை இழந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு மனமுடைந்த நபர் ஒருவர், மூன்று மகள்களையும் கொன்று வட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசம் பிந்த் மாவட்டம் அந்தியாரி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேஷ் ராஜக். இவர் மும்பையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதன்பின் கொரோனா பாதிப்பால் வேலையிழந்து தனது சொந்த கிராமத்திற்கே மீண்டும் திரும்பி வந்துவிட்டார். இவரின் வேலையிழப்பு அவருடைய குடும்பத்தை வறுமையின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது. இதனால் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டு வந்துள்ளது. சில நேரங்களில் அது மிகப்பெரிய வாக்குவாதமாகவும் உருவெடுத்துள்ளது. இந்நிலையில், நேற்று இவர்களுக்கு இடையே நடந்த சண்டையால், மனமுடைந்த ராஜேஷ், தனது மகள்களான அனுஷ்கா(10), சின்னா(8), சந்தியா(5) ஆகியோரைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுதுள்ளார்.
அதனால் ஒரு நீளமான கயிறை எடுத்து தனது இடுப்பில் கட்டி கொண்டு, அதே கயிறால் தனது மகள்களையும் இணைத்து கட்டியபடி அவருடைய வீட்டின் அருகிலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை அக்கிராமத்தில் வசிப்பவர்களுக்கு தெரிவந்ததும் அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என டிஐஜி ராஜேஷ் ஹிங்கங்கர் தெரிவித்துள்ளார்.