தமிழகத்தில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பவர்களின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 73,31,302 பேர் காத்திருப்பதாக தமிழக அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதில் 34.41 லட்சம் ஆண்கள், 38.39 லட்சம் பெண்கள், 227 மூன்றாம் பாலினத்தவர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். மாவட்ட மற்றும் மாநில அலுவலகங்களில் பதிவு செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
வேலைவாய்ப்பு: தமிழக இளைஞர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!
