நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு பலரும் தங்களுடைய வேலையை இழந்துள்ளனர். இதனால் மக்களுடைய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா குறைந்த நிலையில் பலரும் வேலை தேடி அலைகின்றனர். அவர்களுக்கு பயன்படும் விதமாக தமிழகத்தில் அரசு சார்பாக வேலைவாய்ப்பு முகாம்கள் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மத்திய அரசின் தேசிய வாழ்வாதார சேவை மையம் சென்னையில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது. 800 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. கல்வித்தகுதி 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். வயது 18 முதல் 30. இடம் சாந்தோம் சர்ச் அருகில். வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 12 அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இதில் எஸ்சி மற்றும் எஸ்டி மக்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.