ஈரோடு மாவட்டம் கலைவாணர் வீதியில் வசிப்பவர் சண்முக சுந்தரத்தின் மகன் குமரகிரி (35). பட்டப்படிப்பு படித்த இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் அவருடைய பெற்றோர்கள் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் மது அருந்திவிட்டு பாரதிதாசன் சாலையில் உள்ள 50 அடி உயர மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் இருந்து ஏரி குதிக்கப் போவதாக சட்டம் போட்டார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் போலீசார் வருவதற்கு முன்பாகவே அவர் அங்கிருந்து கீழே குதித்தார். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையை உயிர் தப்பினார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இந்நிலையில் இளைஞர் தற்கொலைக்கு முயன்றது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.