Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேலைக்கு சென்ற ஊழியர்….. வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரிடம் இருந்து பணத்தை பறித்து சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நவல்பூர் பகுதியில் உமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பாலாறு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 வாலிபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் 5500 ரூபாயை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து உமர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமன், விஜய், பன்னீர்செல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |