மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் அரசு ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பிள்ளையார் கோவில் தெருவில் ராஜாமணி(57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம நல அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜாமணி வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த சிமெண்ட் கட்டை மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.