வேலூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தின் அருகே மக்கள் நீதி மையம் சார்பாக ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் எம்.ஜி.சத்திய நாராயணன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்க நிர்வாகிகளான ரஞ்சித், ஸ்டாலின், திலீப், கார்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் இவைகளின் விலைகளை கட்டுப்படுத்த கோரியும் சொத்து வரி உயர்வை ரத்து செய்யுமாறும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.