வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் கல்லூரி ஆண்டு மலர் வெளியீட்டு விழா, ரத்ததான முகாம், மாணவியர் விடுதி தொடக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சட்டக் கல்லூரியின் முதல்வர் ஜெயகௌரி தலைமை தாங்க சிறப்பு விருந்தினராக இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஜனார்த்தனன் பங்கேற்று சிறப்புரை வழங்கினார். கல்லூரி ஆண்டு மலரை சதீஷ் ராயப்பன் வெளியிட பியூலா எப்சிபா பெற்றுக் கொண்டார்.
இதில் சட்ட கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் ரத்ததானம் செய்தார்கள். இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜெனிஃபர் டயானா, ரம்யா, பன்னீர்செல்வம், நூலகர் கன்னியப்பன், காட்பாடி செஞ்சிலுவை சங்கத்தின் செயலாளர் சிவவடிவு, டாக்டர் தீபக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இறுதியாக உதவி பேராசிரியர் நன்றியுரை வழங்கினார்.