வேலியே பயிரை மேயும் அவலத்திற்கு ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். வேலியே பயிரை மேயும் அவலத்திற்குத் தமிழகம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 12, 2021
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். வேலியே பயிரை மேயும் அவலத்திற்கு தமிழகம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.