குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் பிரபல ஹீரோவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் ,அஸ்வின் ,ஷகிலா ,கனி ஆகியோர் விளையாடி வருகின்றனர். இவர்களில் கனி மற்றும் அஸ்வின் இருவரும் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியானது .
இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதை கவர்ந்த அஸ்வின் சென்னை வந்து முதல் முதலாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுடன் அஸ்வின் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. அஸ்வின் வேறொரு லுக்கில் செம ஸ்டைலாக இருக்கும் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.