Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்… ‘ஆள்தோட்ட பூபதி’ பாடலுக்கு அசத்தலாக நடனமாடிய பிரபல நடிகை… தீயாய் பரவும் வீடியோ…!!!

ஆள்தோட்ட பூபதி பாடலுக்கு நடனமாடிய வீடியோவை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இன்று இவர் தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் ‌. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது .

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யின் சூப்பர் ஹிட் பாடலான ‘ஆள்தோட்ட பூபதி’ பாடலுக்கு  கீர்த்தி சுரேஷ் தனது தம்பியுடன் இணைந்து அசத்தலாக நடனமாடியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய், கீர்த்தி சுரேஷ் இருவரும் பைரவா, சர்க்கார் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |