Categories
மாநில செய்திகள்

வேற லெவலில் மாறப்போகும் கோயம்பேடு… இடம் மாறும் எம் டி சி பேருந்துகள்… இனி செம மவுசு தான்…!!!!!

சென்னையில் நகருக்குள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக வண்டலூரை அடுத்த கீளாம்பாக்கம் பகுதியில் சுமார் 40 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் திறப்பு விழாவிற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது. இந்த புதிய பேருந்து நிலையம் 400 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பணிகள் தாமதமாகி வந்த சூழலில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வரும் தீபாவளி பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகியது.  தற்போது பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதனால் தீபாவளி பண்டிகைக்கு கிளம்பாக்கம் சென்று பேருந்து ஏற முடியாது என தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழலில் நடைமேடைகள் பேருந்து நிலைய முனையத்தின் தரைதல கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றது. அதே நேரம் பேருந்து பணிமனை வழித்தட பாதை வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவை இன்னும் முழுமையாக பணி முடிவடையவில்லை. அதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பதற்கு ஆறு மாதங்கள் ஆகலாம் என கணக்கிடப்பட்டிருக்கின்றது. இந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால் மாநகர பேருந்துகள் இயங்கும் வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது கோயம்பேட்டில் இருந்து 50 சதவீத பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து 50% பேருந்துகளும் என பிரித்து இயக்க திட்டமிடப்பட்டிருக்கின்றது. அதன்படி பிராட்வே ஆவடி, பூந்தமல்லி, கோயம்பேடு, கிண்டி, தாம்பரம் போன்ற பகுதிகளுக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த சூழலில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பணிகளை விரைவுப்படுத்த மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி  போன்றவை ஒன்றுபட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் கட்டுமான பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் அதனை சார்ந்த பிற கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |