Categories
தேசிய செய்திகள்

வேற லெவலில் சாகசம் செய்து அசத்தும் சிறுவன்…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

இந்தியாவின் பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த்மகிந்திரா தன் டுவிட்டரில் பல ஆச்சரியமளிக்கும், அதிசயத்தக்க விசயங்களை வெளியிட்டு வருவார். அந்த அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பலரால் ரசிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. அதாவது, அந்த வீடியோவில் திருநெல்வேலி சாலையில் சிறுவன் ஒருவன் தன் உடலை வளைத்து செய்த சாகசகாட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்போது சிறுவனை சுற்றி மக்கள் பலர் இருக்கின்றனர்.

இதுகுறித்து ஆனந்த்மகிந்திரா பதிவிட்ட தலைப்பில், காமன்வெல்த் 2022 ஆம் வருடத்துக்கான போட்டிகளில் இந்தியா தங்கபதக்கங்களை அள்ளி குவித்தது. இந்நிலையில் திறமைக்கான அடுத்த தலைமுறை செதுக்கப்பட்டு வருகிறது. இந்த திறமைகளை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது என தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை வெளியிட்ட பிறகு டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் அதை ரசித்து, பல விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் சிறுவனின் திறமையையும் பாராட்டி இருக்கின்றனர். அதில் ஒருவர், சிறுவனுக்கு நிதி உதவி செய்யும்படி ஆனந்த் மகிந்திராவை வலியுறுத்தினார்.

அத்துடன் சிறுவன் தன் திறமைகளை வளர்த்துகொள்ள உதவும்படியும் கேட்டு கொண்டுள்ளார். அதன்பிறகே காமன் வெல்த் போட்டிகளில் சிறுவன் ஒருநாள் ஜொலிக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோன்று மற்றொருவர் விளையாட்டில் பாரத நாட்டில் இதுவரை பயன்படுத்தப்படாத ஆற்றல் இது என தெரிவித்துள்ளார். இதேபோன்று வேறு ஒரு நபர், இந்திய கிராமங்களில் இது போன்ற பல்வேறு திறமைகள் நிறைந்தவர்கள் காணப்படுகின்றனர். அவர்களை அங்கீகரித்து சிறந்தமுறையில் வளர்த்தெடுக்க வேண்டும். ஒரு தீவிர இந்திய விளையாட்டு ரசிகராக இந்த விசயத்தில் கூட்டுமுயற்சி நமக்கு அவசியம் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |