செம்பருத்தி தொடர் புகழ் ஷபானா தற்போது சன் டிவி சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.
தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடர் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ஷபானா. அந்த நேரத்தில் டி ஆர் பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. இதன் பின்னர் ஷபானா பாக்கியலட்சுமி தொடர் நடிகர் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் ஷபானா வீட்டில் யாரும் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
மேலும் ஷபானாவின் திருமணத்திலும் குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக தான் செம்பருத்தி தொடர் நிறைவடைந்தது. இதனால் ரசிகர்கள் ஷபானா அடுத்தது என்ன செய்யப் போகின்றார் என எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி சன் டிவியில் ஜோடி என்ற தொடரில் ஷபானா நடிக்க இருக்கின்றாராம். இந்த தொடரின் பூஜை நேற்று நடைபெற்று உள்ளது.