Categories
தேசிய செய்திகள்

வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவன்…” நடுரோட்டில் புரட்டி எடுத்த மனைவி”…. வைரலாகும் புகைப்படம்..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவி ஒருவர் , தன் கணவனை நடுரோட்டில் துரத்தி துரத்தி அடித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த அட்னன் – ஆயிஷா  தம்பதியினர். இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் இவர்கள் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி ஆயிஷாவுக்கு கணவரின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதோடு  அக்கம்பக்கத்தினர் கணவரை  பற்றி தவறாக கூறியுள்ளனர். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால்  கணவனின் நடத்தையில் சந்தேகப்பட்ட மனைவி ,கடந்த 15-ஆம் தேதியன்று கணவனுக்கு தெரியாமல் அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அவ்வாறு செல்லும்போது  சாஸ்திரி நகரில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்றார். இதனால் சந்தேகப்பட்ட ஆயிஷா அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து சென்றார்.

அவ்வாறு செல்லும்போது அங்குள்ள ஒரு துணி கடையில் ஒரு பெண்ணுடன் கணவன் அட்னன் இருந்துள்ளார். அந்தப் பெண் கணவனுடைய காதல் என்பதும், அவருக்கு துணி எடுப்பதற்காக கடைக்கு  வந்ததனர் என்பது  தெரியவந்தது.ஆனால் ஆயிஷா கடைக்கு வெளியே வாசலில் நின்று கொண்டிருந்தார் . இந்நிலையில்  அட்னன்,அவரது காதலியும் துணி எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது ,ஆயிஷா நின்று கொண்டிருப்பதை பார்த்து கணவர் தப்பி ஓட முயன்றார்.

ஆனால் ஆயிஷா அவரை விடாமல் துரத்தி  நடுரோட்டிலேயே புரட்டி புரட்டி அடித்தார். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இதன்பின் தகவலறிந்த போலீசார் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, இருவரையும் சமாதானம் செய்தனர். ஆனால் இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தை வைரலாகி வருகிறது.

Categories

Tech |