பீகாரில் தன் மனைவி விரும்பிய நபருடன் கணவன் திருமணம் செய்து வைத்துள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல் என்ற நபருக்கும் சப்னா குமாரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆனது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தற்போது சப்னாவுக்கு ராஜ்குமார் என்பவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த சப்னாவின் குடும்பத்தார் அவரை கண்டித்தனர்.
ஆனால் அவர் ராஜ்குமாரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்பதில் உறுதியாக இருந்ததார். மனைவி ஆசையை நிறைவேற்ற அவரது கணவர் மண்டலே திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். அதனால் கோவில் ஒன்றில் வைத்து தனது மனைவியின் திருமணத்தை நடத்தியும் வைத்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு மண்டலின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.