Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேறொருவருடன் நிச்சயம்…. வீடு புகுந்து காதலியை கழுத்தறுத்து கொன்ற காதலன்…..!!!!

மதுரையில் பட்ட பகலில் வீடு புகுந்து இளம் பெண் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பலசரக்கு கடை நடத்தி வரும் பாண்டியனின் மூத்த மகள் அபர்ணா (19), விராட்டி பத்தை சேர்ந்த ஹரிஹரன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனிடையே ஹரிஹரன் அவரது வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் பாண்டி தன் மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுக்க மறுப்பு தெரிவித்து விட்டார்.

அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஹரிகரன் அபர்ணாவுக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாண்டி தனது மகளை வேறு ஒருவருக்கு திருமணம் முடித்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். இதனை அறிந்து ஆத்திரமடைந்த ஹரிஹரன் நேற்று மதியம் அபர்ணா வீட்டிற்கு சென்று வீட்டில் தனியாக இருந்த அவரை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தகராறு செய்துள்ளார்.

அதற்கு அபர்ணா சமாதிக்காததால் ஆத்திரத்தின் கத்தியால் அவரது கழுத்தை அறுத்தும் குத்தியும் கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து ஹரிஹரன் தப்பித்துச் சென்று விட்டார். அப்போது ஹரிஹரனை கண்டுபிடிக்க அபர்ணாவின் தாயார் மற்றும் சித்தப்பா முயற்சி செய்தபோது அவரது கை மட்டும் அங்கு சிக்கியது. அதில் கத்தி மற்றும் சுத்தியல் கையுறை இருப்பதைக் கண்டு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தனது மகள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பிறகு இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |