விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள களாம்பாக்கம் கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தில் களாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 600 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் கொள்முதல் நிலையத்தை சின்னமண்டலி கிராமத்திற்கு மாற்றுவதாக அறிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கூடாது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்விஜான்வர்கீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் கோரிக்கை மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.