கடந்த 1972-ம் ஆண்டு ஜெர்மனியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேர் 9.9secondல் ஓடினர். இவர்கள் 2 பேரும் 2-வது சுற்றுக்கு தயாராக இருந்த நிலையில் பயிற்சியாளர் உங்களுக்கு 6 மணிக்குதான் 2-வது சுற்று ஆரம்பமாகிறது என கூறினார். இதனையடுத்து 2 பேரும் தங்களுடைய அறைக்கு சென்று ஓய்வு எடுத்துவிட்டு 4 மணிக்கு டிவியை பார்த்தபோது அதில் 2-ம் சுற்றுக்கான ஓட்டப்பந்தயம் நடந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த 2 பேரும் உடனடியாக விளையாட்டு அரங்கத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் முடிந்து அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர். அதாவது பயிற்சியாளரிடம் இருந்த schedule time 24 மணி நேரமாக இருந்துள்ளது. ஆனால் போட்டியாளர்களிடம் இருந்த schedule Timeல் 16.00 மணி என குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது பயிற்சியாளரின் கவனக்குறைவினால் வேர்ல்ட் ரெக்கார்ட் வைத்திருந்த 2 பேருமே ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனது. இந்த 2-ம் சுற்று ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர் 10.10 செகண்ட் தான் ஓடி இருந்தார்.