ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலைப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் சூறாவளி காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் மலைப்பாதையில் பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்ததால் சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மண் சரிவும், மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொக்லைன் இயந்திரம் மூலம் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி பள்ளத்தை சரி செய்தனர். இதன் காரணமாக அந்தியூர்- மைசூர் மலைப்பகுதியில் எட்டு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.