கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டுமென்றால் நம் கைகளை அடிக்கடி நன்றாக கழுவ வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனால் இயற்கை முறையில் பக்க விளைவு இல்லாமல் பயனுள்ளதாக அமையக்கூடிய சானிடைசர் செய்வது பற்றி தெரிந்துகொள்வோம்..!
கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு சோப்பினால் கைகளை கழுவுவது இல்லாமல், சனிடைசர் பயன்படுத்துபவர்கள் தான் அதிகம் உள்ளனர். இதனால் மார்க்கெட்டில் இதற்கு ஏகப்பட்ட டிமாண்ட், அதோடு இதனின் விலையும் ஏறி விட்டது. அதனால் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து செலவு இல்லாமல் இயற்கையாக தயாரிக்கலாம்.
இயற்கையான சனிடேஷன் உங்கள் வீட்டில் எப்படி செய்யலாம்.?
தேவையான மூலப் பொருட்கள்:
ரப்பிங் ஆல்கஹால் இது கெமிஸ்ட்டரி கடையில் கிடைக்கும்.
வேப்பிலை வீட்டின் பக்கத்தில் இருக்கக்கூடியது. ஒரு கொத்து இலையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். அதன் நிறம் மாறும் வரை, அதன் பிறகு அந்த தண்ணீரை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
சோற்றுகற்றாலை ஜெல் வீட்டு பக்கத்தில் இருக்கக்கொடியது. அல்லது கடைகளிலும் வாங்கிக்கொள்ளலாம். அதன் ஜெல்லை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
மஞ்சள் தூள் சமையலுக்கு பயன்படுத்துவது.
செய்முறை:
மூன்று மடங்கு ரப்பிங் ஆல்கஹால், ஒரு மடங்கு கொதிக்க வைத்து வைத்திருக்கும் வேப்பிலை தண்ணீர், அதன் பிறகு மஞ்சள் தூள் 2 ஸ்பூன், அதன்பிறகு கற்றாழையின் ஜெல், பின்னர் வாசனைக்காக, வாசனை எண்ணெய் (தேவைப்பட்டால்) இவை அனைத்தையும் ஒன்றாக கலக்கிக்கொண்டு அல்லது நன்றாக கடைந்து எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு இதை ஒரு பாட்டிலில் வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது இயற்கையான முறையில் சனிடைசர் ரெடி..!