Categories
மாநில செய்திகள்

வேதியியல் ஆசிரியர் செய்த வேதனை…. அப்படி என்ன செய்தார் தெரியுமா?…. அச்சத்தில் பெற்றோர்கள்….!!!

சென்னையில் உள்ள முகப்பேர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் ஸ்ரீதர் ராமசாமி என்பவர் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகளுக்கு வேதியியல் பாடம் எடுத்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. இதனால் அனைத்து மாணவியரின் எண்களையும் ஆசிரியர்கள் பெற்று வைத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர் ஸ்ரீதர் மாணவிகளின் எண்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி தனது லீலைகளை தொடங்கி உள்ளார். ஆசிரியர் என்று பயந்து பதற்றத்துடன் பதிலளிக்க ஆரம்பித்த மாணவிகளை தன் வலையில் சிக்க வைத்தார். இதனையடுத்து மாணவிகளிடம் அத்துமீறி பேசி வெளியே செல்வோம் என்று கேட்டுள்ளார். சில மாணவிகள் இவரை நம்பி அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்று நம்பிக்கையில் அவரிடம் வெளியில் சென்றுள்ளனர்.

இவ்வாறு பல முறை நடந்தாக கூறப்படுகிறது. அவர் மாணவிகளை வெளியே அழைத்துச் சென்றது மட்டுமில்லாமல் அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஒரு அளவுக்கு மேல் சகித்துக் கொள்ள முடியாத மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறி கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து பெற்றோர் குழந்தைகள் நலத்துறை காவலர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடம் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் ஸ்ரீதர் மாணவிகளுடன் பேசிய வாட்ஸ் அப் பதிவுகளும், ஆடியோ பதிவுகளும் விசாரணையில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த குற்றச்சாட்டை உறுதி செய்யும் நோக்கில் ஸ்ரீதரிடமும் சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் பெற்றோர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |