நாகை மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ வார்டு கட்டிடத்தின் வாராண்டாவில் காங்கிரீட் காரை பெயர்ந்து விழுந்தது. இதில் ரேவதி என்ற பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. வேதாரண்யம் அடுத்த தென்னடார் கிராமத்தில் இருந்து சசிகலா என்ற பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அவருக்கு உதவியாளராக அதே பகுதியை சேர்ந்த உறவினர் ரேவதி பிரசவ அறைக்கு வெளியிலுள்ள வரண்டாவில் படுத்திருந்த போது கட்டிடத்தின் மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்தது. இதனால் ரேவதி கைவிரலில் லேசான உள்காயம் ஏற்பட்டுள்ளது. பின் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிகழ்வு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.