Categories
தேசிய செய்திகள்

“வேண்டாம்,வேண்டாம்,என்ன விட்டுடுங்க” … 14 வயது சிறுமியை… அனைத்து பெற்றோர்களையும் கலங்க வைக்கும் சம்பவம்..!!

இன்றைய நவீன நாகரீக உலகில் பெண் சுதந்திரம் பற்றி ஆயிரம்தான் பேசினாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை அனைவருமே பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அனைவரும் சுதந்திரமாக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வர முடியும் என்றால் அது நிச்சயம் இயலாத காரியமாக தான் நம் இந்தியாவில் தற்போது இருந்து வருகின்றது.

பெண்கள் வேலை செய்யும் இடத்தில் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு பதில் கூற முடியுமா என்றால் இல்லை என்றுதான் கூறமுடியும். நம் நாட்டில் பெண்கள் தங்களது லட்சியத்தை நோக்கி பயணிக்க முயற்சி செய்தாலும் பல இன்னல்கள் அவர்களை லட்சியத்தை அடைய விடாமல் தடுத்து நிறுத்துகிறது. அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மும்பையை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் குத்துச்சண்டை மீது அதிக ஆர்வம் உடன் இருந்துள்ளார். இவரின் ஆர்வத்தைக் கண்ட பெற்றோர்கள் அந்த பகுதியில் உள்ள 30 வயதான குத்துச்சண்டை பயிற்சியாளர்களிடம் தங்களது மகளை சேர்த்துவிட்டனர். மிகவும் உற்சாகமாக வந்து அந்த சிறுமி பயிற்சியை கற்று வந்தார். இதற்கு இடையில் திடீரென்று அவர் சோகமாக இருந்தார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் அந்த சிறுமியிடம் கேட்டபோது அந்த பயிற்சியாளர் அந்த சிறுமியை கற்பழித்து அதுமட்டுமில்லாமல் இதை யாரிடமாவது கூறினால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அந்த குத்துச் சண்டைப் பயிற்சியாளர் போலீசார் கைது செய்தனர். மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக பெற்றோர்கள் அனுப்பிய நிலையில், இப்படி ஒரு சம்பவம் நடந்தது அனைத்து பெற்றோர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |