பீஸ்ட் படத்தில் விஜய் பேசி தெறிக்கவிடும் வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தாறுமாறாக வைரலாகி வருகிறது. “உனக்கு வேணும்னா தமிழ் கத்துக்கிட்டு வா..எல்லா தடவையும் இந்தியில ட்ரான்ஸ்லேட் பண்ண முடியாது..” என்று பேசுவதெல்லாம் வேற லெவலாம். இணைப்பு மொழி என்று ஏ ஆர் ரகுமான், சிம்பு, அனிருத் என திரைப்பிரபலங்கள் கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் இந்த வசனம் சமூக வலைதளங்களை விவாதம் ஆகி வருகிறது.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், இந்த படத்தில் விஜய் பேசிய வசனத்தை பல இடங்களில் நானே பேசி உள்ளேன் என்று கூறியுள்ளார். கடந்த காலத்தில் விஜய் பாஜக இடையே உரசல் இருந்த நிலையில் தற்போது விஜய்யின் கருத்தை பாஜக ஆதரிக்க தொடங்கியுள்ளது அரசியலில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.