Categories
உலக செய்திகள்

வேணுகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான 2 சிலைகள்… பிரபல நாட்டில் கண்டுபிடிப்பு… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!!!!

திருவாரூர் ஆலந்தூர் வேணுகோபால சுவாமி கோயிலில் உள்ள சிலைகள் மாயமானதாக கடந்த 50 வருடங்களுக்கு முன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் உலக அளவில் உள்ள அருங்காட்சியகத்தில் சிலைகளை ஒப்பிட்டு பார்க்கும்போது மாயமான இரண்டு சிலைகளும் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிலைகளை மீட்கும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசின் மூலமாக ஆவணங்களை அனுப்பி யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிலைகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே 2017 ஆம் வருடம் இதே கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் விஷ்ணு போன்ற மூன்று சிலைகள் போலியாக தயார் செய்யப்பட்டு வேணுகோபால சுவாமி கோயிலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த சிலைகள் திருடப்பட்டதாக தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள சிலைகளும் இது போல் போலியாக தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றதா என்ற சந்தேகத்தின் பெயரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது ஆறு சிலைகள் போலியாக தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இது பற்றி விசாரணையின் போது தற்போது யோக நரசிம்மர் மற்றும் விநாயகர் சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது மேலும் மீதமுள்ள சிலைகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |