Categories
மாநில செய்திகள்

வேட்புமனு தாக்கல் தாக்கல்… எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி… கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின்… சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!!

சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமியும், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட பல்வேறு கட்சியினர் போட்டி போட்டு தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் களத்தில் அறிக்கைகளை திமுக சார்பில் மு க ஸ்டாலின் வெளியிட்டார். இதையடுத்து அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டனர். இந்த நிலையில் இன்று எடப்பாடி தொகுதியில் போட்டியிட முதல்வர் பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதே போல கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். கோவை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்தார். பண்ருட்டி தொகுதியில் போட்டியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Categories

Tech |