தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது.
இந்நிலையில் சென்னையில் நேற்றைய தினம் பறக்கும் படையினரால் ரூபாய் 1.39 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது கூட்டமாக வரக்கூடாது என்று மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தியுள்ளார். பொது இடங்களில் நேற்று வரையிலும் 3,688 சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.